பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை வாங்க தயக்கம்

பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை வாங்க தயக்கம்

21 செப், 2022 – 10:25 IST

எழுத்தின் அளவு:


பாலிவுட்டில் 70களில் ஒரு கலக்கு கலக்கியவர் பர்வீன் பாபி. 1973ம் ஆண்டு வெளிவந்த ‘சரித்ரா’ படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து ‘தீவார், அமர் அக்பர் ஆண்டனி, சுஹாக், மேரி ஆவாஸ் சுனோ, காலியா, நமக் ஹலால், குத் தார், ஜானி தோஸ்த்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

அவரது காலத்தில் கிளாமர், கவர்ச்சி என இளம் ரசிகர்களைக் கிறங்கடித்தவர். சில பல காதல்களால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கடந்த 2005ம் ஆண்டு அவரது மும்பை பிளாட்டில் இறந்து கிடந்தார். அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவரது மரணம் பற்றி தெரிய வந்தது.

மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் உள்ள ரிவியரா பில்டிங்கின் 7வது மாடியில் அவருக்குச் சொந்தமான அந்த பிளாட் உள்ளது. அதை விற்பதற்கு தற்போது முயன்று வருகின்றனர். ஆனால், அந்த பிளாட்டை வாங்க யாரும் முன் வரவில்லையாம். பர்வீன் பாபி உடல்நலக் குறைவால் இயற்கையாக மரணம் அடைந்தாலும் அந்த வீட்டில் “ஏதோ ஒன்று” இருப்பதாக பயந்து வாங்க மறுக்கிறார்களாம். இது பற்றிய செய்திகள் மும்பை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலைக்கு என்றால் 15 கோடியும், வாடகைக்கு என்றால் மாதம் 4 லட்ச ரூபாயும் என்று புரோக்கர்கள் நிர்ணயித்துள்ளார்களாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,871FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles