Headlines Immediately : ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்.. பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர்.. இன்னும் பல முக்கிய செய்திகள்..

<robust>தமிழ்நாடு :</robust>

ராணிப்பேட்டை செங்கல்பட்டு மாவட்டம் வரை விரிவடைகிறது சென்னை மாநகராட்சி

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய இன்ஸ்பெக்டர் உட்பட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை தேதி ஒத்திவைப்பு

சாதிய பாகுபாடு புகார்: பாஞ்சாகுளம் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்

திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை

திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்

திமுக ஆட்சி என்றாலே கொலை, கொள்ளை தான் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

தமிழகத்திலேயே முன்மாதிரியாக கீழடி அருங்காட்சியகம் அமையும் – எம்.பி.சு.வெங்கடேசன்

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

<robust>இந்தியா:</robust>

உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் – யுஜிசி உத்தரவு

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்

100 சதவிகிதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி   இன்னும் சில மாதங்களில் பரவலாக மக்களுக்குக் கிடைக்கும் – இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் தகவல்

பாதயாத்திரை சென்ற இடத்தில் படகு போட்டியில் ராகுல் காந்தி பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

<robust>உலகம்:</robust>

10 நாள் அஞ்சலிக்கு பின் அரசு மரியாதையுடன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உட்பட உலக தலைவர்கள் பங்கேற்பு

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரைனில் மிக்கோலைவ் பகுதியில் உள்ள அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் நள்ளிரவில் தாக்குதல்

கோஸ்டா ரீகாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை

<robust>விளையாட்டு:</robust>

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: மொகாலியில் இரவு 7.30 மணிக்கு தொடக்கம்

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் தங்கயிருந்த அறைக்குள் புகுந்த பாம்பின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,502FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles