Comedy Actor Senthil Sharing Display screen Area With Santhanam For Very First Time CASIO In Kick

நகைச்சுவை நடிகர் செந்தில், சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் “கிக்” திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80கள் தொடங்கி முக்கிய நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்து கோலோச்சி வருகிறார் நடிகர் செந்தில். 

கவுண்டமணி, வடிவேலு என அன்று தொடங்கி அடுத்தடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் காமெடி கூட்டணி அமைத்து கலக்கி வரும் செந்தில் தற்போது நடிகர் சந்தானத்துடன் முதன்முதலாக கூட்டணி அமைத்துள்ளார்.

அதன்படி சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் “கிக்” திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் செந்தில்  நடிக்க உள்ளார்.

இப்படத்தில் கேசியோ எனும் கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்கும் நிலையில், முன்னதாக அவரது லுக் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

இப்படத்தில் நடிகை கோவை சரளாவும் ஃபயர் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஜூம்’ படத்தின் தமிழ் ரீமேக் ’கிக்’. இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் தன்யா ஹோப், ராகினி திவிவேதி எனும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பார்டியூன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார் நவீன் ராஜ். ஒரிஜினல் ஜூம் படத்தை இயக்கிய பிரசாந்த் ராஜே இதையும் இயக்குகிறார். அர்ஜுன் ஜனயா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles