ராஷ்மிகா, அமிதாப் கவனம் ஈர்க்கும் நடிப்பில் ‘குட் பை’ ட்ரெய்லர்!

மும்பை: அபிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் ’குட் பை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. விகாஸ் பால் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'குட் பை’ படத்தின் இந்த ட்ரெய்லர் மூன்று நிமிடங்களைக் கொண்டுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களான அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா ஆகியோரே பெரும்பாலான காட்சிகளில் அங்கம் வகிக்கிறார்கள்.

இப்படத்தின் மையக் கருவாக நீனா குப்தாவின் மரணமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் டார்க் – ஹ்யூமர் பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, சுனில் க்ரோவர் முதலான துணைக் கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles