இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் வெற்றிமாறனின் ’விடுதலை'

இயக்குநர் வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது.

RS Infotainment & Pink Large Motion pictures, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து வெளியிடும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.

image

படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் படம் தான், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிவரும் ’விடுதலை’.

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். மற்றும் RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

image

சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது அடுத்த அதிரடியாக இப்படத்தின் இரண்டு பாகங்களையும் Pink Large Motion pictures சார்பில் உதயநிதி வழங்குகிறார் என தயாரிப்பு தரப்பில் அறிவித்துள்ளது.

image

தொடர் வெற்றிப்படங்களின் பிராண்டாக மாறியிருக்கும் Pink Large Motion pictures நிறுவனம் “விடுதலை” படத்தினை வெளியிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

விடுதலை- பாகம் 1 இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன்‌ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

image

சமீபத்தில் தமிழில் ஒரு முழுமையான திரை அனுபவம் தரும் படைப்பாக, பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக மாறி நிற்கும் விடுதலை படம் பார்வையாளர்களிடம் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அமைக்கப்பட்ட 10கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது.

image

தற்போது, கொடைக்கானலில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கிறார். பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்‌ஷன் ப்ளாக்கில் பங்கேற்கிறார்கள்.

விடுதலை படத்தில் பிரமாண்டமான நட்சத்திர கூட்டணி அமைந்துள்ளது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

image

விடுதலை பாகம் 1 & பாகம் 2 ஆகிய இரு படங்களையும் Pink Large Motion pictures உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில், முதல் பாகத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles