Actor Sivakarthikeyan Prince Film 1st Single Track Launched

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,502FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles