த்ரிஷ்யம் 3 படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர் – உற்சாகத்தில் ரசிகர்கள் | Mohanlal To Return As Georgekutty In Drishyam 3, Confirms Producer

‘த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்குவதை தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இந்தப் படத்திலும் இருந்ததால், இந்தப் படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இதன் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்குவதை தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உறுதிப்படுத்தியுள்ளார். கேரளாவில் நடந்த விருது விழாவில் கலந்துகொண்ட அவர் இதைத் தெரிவித்தார்.

இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ’கிளாசிக் கிரிமினல் இஸ் பேக்’ என்று கூறி ’த்ரிஷ்யம் 3’ ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles