I Was Extraordinarily Scared Of Girls Until I Was 18 Years Previous Says Liger Star Vijay Deverakonda | Vijay Deverakonda :’பதினெட்டு வயசு வரைக்கும் பொண்ணுங்களை பாத்தாவே எனக்கு பயம்”

விஜய் தேவரகொண்டா : நான் ஆண்கள் பள்ளியில் படித்ததால் எனக்கு பெண்களைப் பார்த்தால் மிகவும் பயமாக இருக்கும். அவர்களை நான் வேற்று கிரகவாசிகள்போல் பார்ப்பேன். எனக்கு 18 வயது வரை பெண்களின் கண்களை கூட பார்த்து பேச தெரியாது என்று ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘லிகர்’. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிவுள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குத்துச்சண்டை வீரராக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இப்படத்தை பற்றிய தகவல் தெரிந்த முதல் நாளிலிருந்து, சினிமா ரசிகர்கள் லிகர் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். “ஐ ஸ்மார்ட் சங்கர்”,  “போக்கிரி” ஆகிய மாஸ் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், லிகர் படத்தின் இயக்குநர் ஆவார். கடந்த 20 ஜனவரி 2020ல் படம் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே 15 செப்டம்பர்2021 அன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது இந்த  நிலையில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ட்ரைலர் காட்சிகளில், விஜய் தேவரகொண்டா, பேச்சு குறைபாடுள்ளவர் மற்றும் பல கேங்க்ஸ்டர் சண்டைகளில் சிக்கி வரும் ஒரு கிக்பாக்ஸராக காண்பிக்கப்படுகிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இவரது ஜோடியாகவும், நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாகவும் நடித்துள்ளனர்.

லிகர் படத்தின் ஹைலைட்டே, மைக் டைசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான்.மைக் டைசன் இதற்கு முன்பாக, ஹாங் ஹோவர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் கதைகளமானது, விஜய் தேவர்கொண்டா ஒரு டீ கடை வியாபாரியாக இருந்து, இந்தியன் பாக்ஸராக MMA பட்டத்தை எப்படி வென்று காட்டுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.

50 முறை குத்துச்சண்டை பட்டம் வென்ற சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், இந்தப்படத்தில்  வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் தாண்டியா படமாக தயாராகி வருகிறது அதை தொடர்ந்து நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார் அதில் ஒரு நேர்காணலில் உங்களை பற்றி பிடித்த விஷயம் மற்றும் படிக்காத விஷயத்தை கூறுங்கள் என்று சொன்னபோது விஜய் தேவரகொண்டா நான் ஆண்கள் பள்ளியில் படித்ததால் எனக்கு பெண்களைப் பார்த்தால் மிகவும் பயமாக இருக்கும் அவர்களை நான் வேற்று கிரகவாசிகள் போல் பார்ப்பேன். எனக்கு 18 வயது வரை பெண்களின் கண்களை கூட பார்த்து பேச தெரியாது என்று அந்த நேர்காணலில் கூறி இருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles