Rj Balaji Actor Subsequent Film Title Director Actress Revealed Newest Replace Veetla Vishesham

RJ Balaji ஆர்ஜே.பாலாஜியின் நெஸ்ட் மூவ் இது தான்… தகவல் சொன்ன நடிகை 

தமிழ் சினிமாவில் பலரும் தனது திறமைகளால் முன்னேறியவர்கள். அதில் ஒருவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து துணை நடிகராக, நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று ஒரு பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகரை பிரபலம் அடைந்துள்ளனர் ஆர்ஜே பாலாஜி. 

தொடர் வெற்றி:

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் சார்ந்த ஒரு படமான ‘எல்கேஜி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். அப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்தார் ஆர்ஜே.பாலாஜி. நகைச்சுவை கலந்த அரசியல் படம் என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மிக பெரிய வெற்றியும் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விஷேசம்’ போன்ற படங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். இந்த இரு படங்களுக்கும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஒரு வித்தியாசமான திரைக்கதை என்பதால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

 


ஆர்ஜே.பாலாஜியின் அடுத்த திட்டம் ரெடி:

ஆர்ஜே பாலாஜியின் வெற்றி படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளார். நடிகை ஷிவானி ராஜசேகருடன் இணைந்து ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தை திட்டமிட்டுள்ளனர் என்று சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ மற்றும் ‘ஜுங்கா’ உள்ளிட்ட  படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன்னர் சிம்பு நடிப்பில் “கொரோனா குமார்” என்ற படத்தை இயக்க இருந்தார் கோகுல் . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்திற்கு நிதியுவி அளிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அதற்கான காரணங்கள்  இதுவரையில் தெரியவில்லை. அதனை தொடந்து கோகுல் இயக்கவிருக்கும் திரைப்படம் “சிங்கப்பூர் சலூன்”.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,502FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles