தீங்கிழைக்கும் மால்வேர் :
ஒவ்வொரு ஆண்டும் கூகுள் தனது பிளே ஸ்டோரில் வரிசைப்படுத்தப்படும் செயலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தீவிர முயற்சிகள் செய்து வருகிறது. ஆனாலும் அதையும் மீறி தீங்கிழைக்கும் வைரஸ் ஊடுறுவி கூகுளுக்கு தலைவலியை ஏற்படுத்துவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தீம்பொருளை வழங்கி வரும் 35 ஆப்ஸ்களை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
எப்படி அட்டாக் நடத்தப்படுகிறது ?
ருமேனிய சைபர் செக்யூரிட்டி டெக்னாலஜி நிறுவனமான Bitdefender இன் அறிக்கையின்படி, Google Play Retailer இல் ஒரு புதிய மால்வேர் கேம்பைன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மால்வேர் கேம்பைன் பயனாளர்களை கவர புதிய யுக்திகளை கையாளுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சில போலியான விளம்பரங்களை கொடுத்து பயனாளர்களை வைரஸ் உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்ய பயனாளர்களை தூண்டுகின்றனர். அவர்கள் பதிவிறக்கம் செய்த பின்னர் பெயரை மாற்றி , கணக்கிலடங்காத பல விளம்பரங்களை பயனாளர்களுக்கு கொடுக்கின்றனர். இந்த விளம்பரங்கள் அனைத்துமே தீங்கிழைக்கும் மால்வேருடன் தொடர்புடையவை . பெயரை மாற்றுவதால் அதனை கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கிறது. இந்த சைபர் கிரைமினல்கள் Google Play இல் தங்கள் இருப்பை பணமாக்குவது மட்டுமல்லாமல், பயனர் அனுபவத்தையும் சீர்குலைக்கிறார்கள் என்கிறார்கள் Bitdefender .
Bitdefender has recognized 35 purposes which have snuck into the Play Retailer. https://t.co/w6mk80w2YS
— Bitdefender (@Bitdefender) August 19, 2022
பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன ?
தற்போது கிடைத்துள்ள பொது தரவுகளின் அடிப்படையில் 35 தீங்கிழைக்கும் மால்வேர் கொண்ட வைரஸ் செயலிகளை Google Play Retailer இல் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்திருப்பதாக ருமேனிய சைபர் செக்யூரிட்டி டெக்னாலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக சில நம்பத்தகுந்த செயலிகளும் தங்கள் பயனாளர்களுக்கு விளம்பரங்களை வழங்குகின்றன. ஆனால் அவை வேண்டாம் என நினைத்தால் பயனாளர்கள் அந்த செயலியை நீக்குவதற்கான வசதி வெளிப்படையாக இருக்கும். ஆனால் இவ்வகை மால்வேர் குழுக்கள் பெயரை மாற்றுவதால் உடனடியாக கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறது .தற்போதை மால்வேர் குழு real-time behavioural know-how ஐ பயன்படுத்துவதாக Bitdefender கூறுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளும் ஆபத்துகள் இல்லாதவை என நம்புவதை பயனாளர்கள் முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும் . தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும் என்கிறது அந்நிறுவனம்.