சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் – 1990’s TV Actors re-union celebration

சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம்

18 ஆக, 2022 – 10:53 IST

எழுத்தின் அளவு:


1980-90களின் திரைப்பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இடத்தில் ஒன்றாக கூடி தங்களின் பழைய கால மலரும் நினைவுகளை கொண்டாடி வருவது வழக்கம். இதேப்பாணியில் முதன்முறையாக சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒன்றுகூடி கொண்டாட்டம் நடத்தி உள்ளனர்.

1990களில் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர். 20 வருடக்கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர். ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுப்பட்ட இவர்கள் உடைகளிலும் தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினர்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் சங்கமித்த இந்த கொண்டாட்டத்தில் கவுஷிக், தீபக், அப்ஸர், கவுதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், ராகவி சசி, ஷில்பா, அம்மு இராமசந்திரன், வெங்கட், நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு, போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட் , ரிஷி, அஞ்சு, கணேஷ்கர், ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், கேஎஸ்ஜி வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம், பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸ்வேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தாண்டு போன்று இனி ஒவ்வொரு ஆண்டும் இதுமாதிரி ரீ-யூனியன் கொண்டாட்டத்தை தொடர சின்னத்திரை நட்சத்திரங்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles