கார்த்தி படங்களின் ஓப்பனிங்கில் இது டாப்… ‘விருமன்’ 3 நாட்களில் ரூ.30 கோடி வசூல் | viruman Film mints over Rs 30 crore in Tamil Nadu within the first weekend

கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளது. மேலும், கார்த்தி நடித்த படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் கிடைத்த படம் இதுதான் என்றும் குறிப்பிடப்படுகிறது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் ‘விருமன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 475 திரைகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.8.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.10 கோடியை வசூலித்தது. மூன்றாம் நாள் ரூ.10.85 கோடி என மொத்தம் 3 நாட்களில் மட்டும் படம் ரூ.30 கோடியை வசூலித்துள்ளது. நான்காவது 4 நாளான நேற்று படம் ரூ.7 முதல் ரூ.9 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

நான்காவது நாளான நேற்றும் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளதால், இந்த வாரத்திற்குள் படம் ரூ.50 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது. மேலும் ‘விருமன்’ கார்த்திக்கு அதிகப்பட்ச ஓப்பனிங் கொடுத்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் ரூ.8 கோடி வசூல் செய்து 8-வது இடத்தை விருமன் பிடித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,871FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles