என்னய்யா துணி தச்சிருக்க… கேள்வி கேட்ட சக ஊழியரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த டெய்லர்!

சாதாரணமாக துணி ஒழுங்காக தைக்கவில்லை என்று கூறிய சக துணி தைப்பவரை கத்தரிகோலை எடுத்து குத்திய சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் அரங்கேறி உள்ளது.

<robust>வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் வாக்குவாதம்</robust>

வேலை செய்யுமிடத்தில் ஈகோ இருப்பது எல்லா இடங்களிலும் உள்ள ஒரு பொது பிரச்சினைதான். ஆனால் அதன் மூலம் ஏற்படும் வாக்குவாதங்களின் போது அருகில் தாக்குவதற்குண்டான தடிமனான பொருட்களோ, கூர்மையான பொருட்களோ இல்லாமல் இருப்பது நல்லது. ஆனால் தையல் கடைகள் போன்ற இடங்களில் அவற்றை தவிற்பது கடினம். அப்படி ஒரு சாதாரண சண்டையில் தொடங்கி கொலையில் முடிந்த சம்பவம் கோடம்பாக்கத்தை உலுக்கி உள்ளது.

<robust>தையல் கடையில் மோதல்</robust>

40 வயதாகும் சரவணன் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத்தெருவில் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்திலேயே ஒரு தையல் கடையில் தையல் காரராக பணியாற்றி வருகிறார். இவரோடு கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன் என்பவரும் தையல்காரராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இடையே நடந்த மோதலில் தான் சரவணன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Watch Video: தும்பிக்கையை இப்படித்தான் யூஸ் பண்ணனும்…. லைக்ஸ் அள்ளும் யானைக்குட்டி..

<robust>சரவணன் குத்திக் கொலை</robust>

வழக்கமாக கடையில் இருவரும் சேர்ந்து அமர்ந்து துணி தைப்பார்களாம். நேற்று முன்தினம் அதே போல துணி தைக்கையில், சரவணன் சரியாக துணி தைக்கவில்லை என்று மாதவன் கூறி உள்ளார். தன்னை குறை கூறியதை பொறுக்க முடியாத சரவணன் மாதவனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளது. அருகில் தடுக்கவும் ஆளில்லை என்பதால் சண்டை உக்கிரத்தை அடைந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாதவன், அருகே துணி விடுவதற்காக வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து சரவணனை குத்தி உள்ளார்.

<robust>மாதவன் கைது</robust>

கத்தறிக்கோலால் குத்தப்பட்ட சரவணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நடந்த இந்த சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சரவணனை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த மாதவனை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். சரவணனை கொலை செய்வதற்கு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட கத்திரிக்கோலை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சாதாரணமாக ஒரு துணி தைப்பதில் தொடங்கிய வாக்குவாதம், கொலையில் முடிந்த இந்த சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles