ஆக்‌ஷனில் மிரட்டும் அதர்வா: வெளியானது Set off டீசர் | actor atharvaa rocks in motion in set off teaser

சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ‘ட்ரிக்கர்’ (Set off) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சுமார் 01.31 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரின் ஆக்‌ஷன் காட்சிகளில் அதர்வா மிரட்டுகிறார்.

டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜிப்ரான் இசை அமைத்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் வசனங்களை எழுதி உள்ளார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளனர்.

அதர்வா, தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். குழந்தை கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தின் மையக்கரு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் செப்டம்பர் வாக்கில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவு, பின்னணி இசையில் இந்த டீசர் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles