துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ முதல் நாளில் ரூ.5.25 கோடி வசூல் | Dulquer Salmaan’s Sita Ramam’ field workplace assortment Day 1

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீதா ராமம்’ திரைப்படம் முதல் நாளான நேற்று ரூ.5.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருனாள் தாக்கூர் நடித்துள்ள திரைப்படம் ‘சீதா ராமம்’. ராணுவ வீரன் ஒருவனின் காதல் கதையை பேசும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பூமிகா உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் விமர்சனத்தைப் படிக்க : சீதா ராமம் Overview – அதிகம் ஈர்க்கும் காதலும் காட்சிகளும்

வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். பான் இந்தியா படமான ‘சீதா ராமம்’ ஆகஸ்ட் 5-ம் தேதியான நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ஏற்கெனவே ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்தைக் காண முதல் நாளான நேற்று ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்குகளில் குவிந்தனர். அதன் பயனாக படம் முதல் நாள் வசூலாக ரூ.5.25 கோடியை வசூலித்துள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,430FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles