தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அலட்சியமாக செயல்படக்கூடாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மக்கள்கூட்டம் கூடுவதை தவிர்த்து. முகக்கவசம் , சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், அலட்சியமாக மக்கள் செயல்படக்கூடாது என்றனர். குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால் நோய் தொற்று மீண்டும் அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொண்டாலும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தற்போது ஒரே தீர்வு அரசு கூறிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் இறப்பு எண்ணிக்கை குறைந்தது. இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் 27 பேர்கள் பாதிக்கபட்டுள்ளனர் . அதேபோன்று 27 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு 188 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 97265, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95916 , இறந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1161 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்கவேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியப்போக்கில் செயல்பட்டால் மீண்டும் தொற்று அதிக அளவில் பர வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், படுக்கை வசதிகளை அதிகபடுத்தவும் தமிழ்நாடு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.