அஜித் 30 – கடலுக்கு அடியில் பேனர் பிடித்து கொண்டாடிய புதுச்சேரி ரசிகர்கள் | Actor Ajith Cinema journey thirtieth Yr, Puducherry Followers Beneath Water Banner Video on Social Media

புதுச்சேரி: நடிகர் அஜித் குமாரின் 30-ம் ஆண்டு திரையுலக பயணத்தையொட்டி, புதுச்சேரி ரசிகர்கள் கடலுக்கு அடியில் நடிகர் அஜித்திற்கு பேனர் பிடித்து கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி கடல் பகுதியை ஒட்டியுள்ளதால் அரசியல்வாதிகள் பிறந்தநாள், நடிகர்கள் பிறந்தநாள், புதிய படம் வெளியீடு ஆகியவற்றை வரவேற்கும் வகையில் காந்தி சிலைக்கு பின்னர் கடலில் பயணம் செய்து அங்குள்ள இரும்பு கம்பிகளில் பேனர் கட்டி வந்தனர். ஆபத்தை விளைவிக்கும் என்பதால் போலீஸார் அதை அனுமதிப்பதில்லை. அதையும் மீறி பல ரசிகர்கள் பேனர்கள் வைக்கின்றனர். தற்போது அடுத்தக்கட்டமாக தற்போது கடலுக்கு அடியிலும் பேனர் வைக்கின்றனர்.

இன்று புதுச்சேரி அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித் குமார் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில் 60 அடி ஆழத்தில் ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் பேனர் பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ஆழ்கடல் பயிற்சியாளர்கள் மூலம் பேனரை பிடித்தப்படி இருக்கும் வகையில் விடியோ, புகைப்படங்களை தற்போது அதிக படியாக பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே, பேனர் கலாசாரம் சாலையில் மட்டுமில்லாமல் தற்போது கடலுக்கு அடியிலும் வரத் தொடங்கியுள்ளது என்று நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,430FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles