கேரள திரைப்பட விருது நிகழ்ச்சி ரத்து | kerala state movie awards ceremony postponed attributable to heavy rainfall

கேரள அரசின் 52-வது திரைப்பட விருதுகள், கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது பிஜூ மேனனுக்கும் ஜோஜூ ஜார்ஜுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகையாக ரேவதி, சிறந்த இயக்குநராக, திலீஷ் போத்தன், சிறந்த பொழுதுபோக்கு படமாக, ஹிருதயம் உட்பட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது வழங்கும் விழா, திருவனந்தபுரத்தில் நடக்க இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார். ‘‘தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திருவனந்தபுரம் உட்பட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற இருந்த திரைப்பட விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles