‘இந்தியன் 2’ படத்தில் இருந்து நான் விலகிவிட்டேனா? – மாஸ் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தனது சமூகவலைத்தளம் மூலம் அதற்கு  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் படப்பிடிப்பு எப்போது முதல் ஆரம்பமாகிறது என்பதையும் நடிகை காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தந்தை – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத் துறையில் அதிகாரிகள் செய்யும் ஊழலை களையும்விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு கடந்த 2019-ம் ஆண்டு முதல் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா புரொடெக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்கு, இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடு உயர்நீதிமன்றம் வரை சென்றது ஆகிய பிரச்சனைகளால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.

image

இதற்கிடையில், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ‘ஆர்.சி 15’ படத்தை இயக்க சென்றுவிட்டார். ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவந்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் கடந்த வருடம் உயிரிழந்துவிட்டனர். இதனால் ‘இந்தியன் 2’ படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். மேலும் ‘இந்தியன் 2’ படம் தாமதமாகி வந்தநிலையில், இந்தப் படத்தில் நடித்துவந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி, குழந்தையும் பிறந்தது.

இதனால் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவும், மேலும் அவருக்குப் பதில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் ‘இந்தியன் 2’ குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய காஜல் அகர்வால், வருகிற செப்டம்பர் 13-ம் தேதி ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

image

இதன் மூலம் காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ‘இந்தியன் 2’ படத்தை ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். மேலும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால் ‘இந்தியன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,790FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles