‘நடிக்கவே ஆரம்பிக்கல, அதுக்குள்ளயா’ – கமலின் ரோலக்ஸ் வாட்ச் குறித்து பேசிய சூர்யா

 ‘விருமன்’ இசை வெளியீட்டு விழாவில் தம்பி கார்த்தி மற்றும் தனது திரைப்பயணம் குறித்து நடிகர் சூர்யா பேசிய சம்பவம் ரசிகர்களை கவர்ந்தது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருமன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் நடந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, இயக்குநர்கள் அமீர், பாலா இல்லையென்றால் நானும், எனது தம்பியும் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டோம். அவர்கள் தான் எங்களது கேரியரில் முக்கியமானவர்கள். எங்களை செதுக்கியவர்கள்.

image

‘பிதாமகன்’, ‘பேரழகன்’ உள்ளிட்ட படங்களில் பாதி சொல்லிக்கொடுத்தது சிங்கம் புலி அவர்கள்தான். அவரால்தான் அந்தக் கதாபாத்திரங்களை மிகவும் நன்றாக நடிக்க முடிந்தது. யுவனை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கிரவுண்டுல ஓடவிட்டன்ல, அதுக்காக செனோரீட்டா மாதிரியான பாடலைக் கொடுத்து முட்டிய பேத்துட்டார். நான் இன்னும் நடிக்க கத்துக்கவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள இந்த மாதிரி பாட்டு போட்டு என்ன ஆட விடுறான்னேனு தூங்காம இருந்திருக்கிறேன். கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் இதுதான் என்று மேடையில் இருந்துகொண்டே கையை தூக்கி ரசிகர்களிடம் சூர்யா காண்பித்தார். மதுரை கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடுகிற ஊர், உங்களடோ ஆசிர்வாதம் எப்பவும் வேணும்” இவ்வாறு கூறினார்.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles