பெங்களூரில் பயிற்சி முடிந்த நிலையில் கன்னியாகுமரி ராணுவ வீரர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அஞ்சுகண்டரை பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் ரஞ்சித் (21). இந்திய ராணுவத்தில் சேர்ந்து பெங்களூரில் பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடிந்தும் அங்கேயே தங்கியிருந்த ரஞ்சித், அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ரஞ்சித் தற்கொலை குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் ரஞ்சித். கடந்த மாதம் பயிற்சி நிறைவு நாளில் ராணுவ சீருடை அணிந்து எடுத்த புகைப்படத்தை பயிற்சி மைய விதிகளை மீறி சமூக வலைத்தளத்தில் ரஞ்சி வெளியிட்டுள்ளார்.

மற்றவர்கள் விடுமுறையில் சென்றுவிட விசாரணைக்காக இவரை மட்டும் ஊருக்கு அனுப்பாமல் வைத்துள்ளனர். இதனால் தனக்கு பணி கிடைக்காமல் தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தில் ரஞ்சித் கடந்த 29ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் 30ம் தேதி அவருக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் பணி நியமன உத்தரவு வந்துள்ளது. ஒரு நாள் தாமதித்திருந்தால் அவர் ராணுவவீரராக பணியில் சேர்ந்திருப்பார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

<robust>தொடரும் தற்கொலை :</robust>

முன்னதாக, இந்திய ராணுவத்தைத் தவிர, இந்திய விமானப் படையில் 5 ஆண்டுகளில் 148 தற்கொலை வழக்குகளும், இந்திய கடற்படையில் 29 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலை எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ராணுவ வீரர்களில் தற்கொலைகளை தடுத்து, 2 மாதத்திற்கு ஒருமுறை மனரீதியான சிகிச்சை தர வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்திய ராணுவத்தினரிடையே அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு சில காரணங்கள் என்று பாதுகாப்பு நிபுணர்களின் அறிக்கை தெரிவிக்கிறது. சீனியர்களின் அடாவடித்தனமான மனப்பான்மையும், நீண்ட கால விடுமுறை மறுப்பும் இந்திய ராணுவ வீரர்களிடையே ஆபத்தான தற்கொலைக்கு காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்திய ராணுவத் தலைமை அதன் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரிடையே ஏற்படும் தற்கொலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<robust>மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்</robust>

<robust>ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்</robust>

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண