ஒரே நாளில் 28 கோடிக்கு விற்ற ஜானி டெப் ஓவியங்கள்

ஒரே நாளில் 28 கோடிக்கு விற்ற ஜானி டெப் ஓவியங்கள்

02 ஆக, 2022 – 11:40 IST

எழுத்தின் அளவு:


ஹாலிவுட்டில் வெளிவந்த பைரேட்ஸ் கரீபியன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜானி டெப். அவரது ஜேக்ஸ் பெரோ கேரக்டருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அவர் அடிப்படையில் ஒரு ஓவியர்.

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதை தொடர்ந்து அவரது சினிமா வாய்ப்புகள் பறிபோனது. அவர் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தது. முன்னாள் மனைவி, ஜானி டெப்புக்கு 10 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது. என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை என்று முன்னாள் மனைவி கண்கலங்க பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இந்த வழக்கு காலத்தில் வாய்ப்புகள் இன்றி வீட்டில் இருந்ததாலும், கொரோனா காலத்தில் முடங்கியதாலும் அந்த காலகட்டத்தில் ஓவியங்களை வரைந்து தள்ளினார்.

அந்த ஓவியங்களில் சுமார் 780 ஓவியங்களை ஏல நிறுவனத்தின் மூலம் ஏலம் விட்டார். அத்தனை ஓவியங்களும் ஒரே நாளில் இந்திய மதிப்பில் சுமார் 28 கோடிக்கு விற்று தீர்ந்தது. ஏலத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதால் ஏலம்விட்ட நிறுவனத்தின் இணையத்தளமே கிராஷ் ஆகிவிட்டது. இதனை அந்த இணையதளம் அறிவித்துள்ளது. ஓவியத்தில் சம்பாதித்த பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்க ஜானி டெப் முடிவு செய்திருக்கிறாராம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,790FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles