கொலை முயற்சி வழக்கு – மலையாள நடிகர் கைது

மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஆடு 2’, ‘அங்கமாலி டைரீஸ்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள நடிகர் வினீத் தட்டில் டேவிட். இவர், ஆலப்புழையை சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் ரூ.6 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். பாக்கி தொகையை கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கொடுத்த பணத்தை கேட்பதற்காக, வினீத் டேவிட்டின் வீட்டுக்கு அலெக்ஸ் கடந்த 25-ம் தேதி சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், வினீத் வீட்டில் இருந்த வாளால் அலெக்ஸை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அலெக்ஸ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வினீத் தட்டில் டேவிட் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles