போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது- Tamilfunzone

 

கனியாமூர் பள்ளி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த நிதீஷ் வசந்த் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது தொடா்பாக கடந்த 17ஆம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 302 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

படிக்க | மாணவிக்கு பாலியல் தொல்லை: பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்

இதில், 108 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்பேரில், 108 பேரும் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்களில் 8 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக நிதீஷ் வசந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles