ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு – Jailer film capturing at Hyderabad

ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு

26 ஜூலை, 2022 – 10:16 IST

எழுத்தின் அளவு:


தமிழ் சினிமா படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெறாமல் ஐதராபாத்தில் தான் அதிகம் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் தற்போது நடித்து வரும் படப்பிடிப்புகளுக்கான இடம் ஐதராபாத் மட்டுமே. இவர்கள் யாரும் தங்களது படங்களின் படப்பிடிப்பை சென்னையில் அதிகம் நடத்துவதில்லை. இதனால், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது என்பது உண்மை.

ரஜினி அடுத்து நடிக்க உள்ள ‘ஜெயிலர்’ படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாம். சிறைச்சாலை செட் ஆக போடப்பட்டுள்ள அந்த செட்டில்தான் முழு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்காக ரஜினிகாந்த் விரைவில் ரஜினிகாந்த் அங்கு செல்ல உள்ளாராம்.

நெல்சன் கடைசியாக இயக்கிய ‘பீஸ்ட்’ படம் ஒரு ஷாப்பிங் மால் செட்டில்தான் படமாக்கப்பட்டது. அடுத்த படத்தையும் ஒரு ‘செட்’டிலேயே நெல்சன் முடிக்க உள்ளார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை விடவும் அதிகம் லாபம் தரக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்களாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,503FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles