திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்துள்ள துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் வயது ( 67). இவர் இவருடைய மகன் வெங்கடேசன், மகள் சித்ரா ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது வெங்கடேசன் தீப்பெட்டியை எடுத்து கொளுத்தி கொள்ள முயன்றார். ஆனால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஓடி வந்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்து கொண்டு, பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்.

அதனைத்தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடேசன் எடுத்து வந்த மனுவில் எங்களுக்கு சொந்தமாக 78 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை எங்களுடைய உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் அந்த நிலத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு இருந்தோம். இந்த மரவள்ளி கிழக்கு செடிகளை அவர்கள் அடியாட்களுடன் வந்து அழித்ததோடு மட்டுமின்றி என்னுடைய தாய் முனியம்மாவை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தால் விசாரணை நடத்த 10 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர். அதனால் எங்கள் நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீக்குளிக்க முயன்றதாக அவர்களை. காவல்துறையினர் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்கூட்டியில் மறைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து ஆட்சியர் கார் நிறுத்தும் இடத்தில் திடீரென தீக்குளிக்க முயன்றனர். இவர் தீக்குளிப்பதை கண்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து கொண்டனர். அப்போது சேகரின் மனைவி தரையில் படுத்து உருண்டு கதறி அழுதார். இதனால் ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது சேகர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், வடஆண்டாப்பட்டு பகுதியில் நான் என்னுடைய 2 சகோதரர்கள் பெயர்களில் உள்ள இடத்தின் பட்டாவை ரத்து செய்து எந்தவித உரிமையும் இல்லாத நபர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதை ரத்து செய்து எங்கள் பெயரில் பட்டாவை மாற்றி தர வேண்டும் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு தரப்பினர் திடீரென பெட்ரோல் மற்றும் மண்ணெணய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களை மீறி இவர்கள் தீக்குளிக்க பெட்ரோல் கேன் எடுத்து வருகின்றனர்” என்றார்.

<sturdy>மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்</sturdy>

<sturdy>ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்</sturdy>

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

<part class="new_section">Printed at : 25 Jul 2022 03:25 PM (IST)</part>