தேசிய விருது பெற்ற ஒடியா நடிகையை நடு ரோட்டில் வைத்து விரட்டி விரட்டி அடித்து துவம்சம் செய்திருக்கிறார் பிரபல ஒடியா நடிகரின் மனைவி. இது தொடர்பான வீடியோக்கள், படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.
ஒடியா மொழியின் புகழ்மிக்க நடிகையாக வலம் வருபவர் பிரக்ருதி மிஷ்ரா. இவர், பிட்டி பிசினஸ் வாலி, ஹலோ ஹர்சி, மித்தாமித்தா என பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 2006ல் சிறந்த குழந்த நட்சத்திரம் என ஒடிசா மாநில விருதும், ஹலோ ஹர்சி படத்துக்காக 2018ல் தேசிய விருது, ஒடிசா இசை விருது என பற்பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பிரக்ருதி மிஷ்ரா.
பிரக்ருதி மிஷ்ராவும் ஒடிசாவில் பிரபல நடிகராக இருக்கும் பாபுஷன் முஹந்தியும் நெருங்கிய நட்பாக பழகி வந்திருக்கிறார்கள். காலப்போக்கில் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாக ஒடிசா மாநில செய்திகளில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்விருவரும் இணைந்து பிரேமம் என்ற ஒடியா படத்திலும் நடித்திருக்கிறார்கள்.
Regardless of the trigger, the sufferer is being crushed by a girl whereas screaming for help. These unshameful bystanders are fortunately recording movies.#PrakrutiMishraBeatenByBabusanWife #PrakrutiMishra#Babusan pic.twitter.com/pAAOhPu13f
— SUBHRANSU PANDA (@AuthorSubhransu) July 23, 2022
இந்நிலையில், சென்னையில் நடைபெற இருந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் ஒரே காரில் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
இதனை அறிந்த பாபுஷம் முஹந்தியின் மனைவி த்ருப்தி அவர்களது காரை கண்டதும் வழிமறித்து உள்ளே இருந்த பிரக்ருதி மிஷ்ராவை இழுத்து அடித்து, உன்னால்தான் எங்கள் குடும்பத்தில் பிரச்னை எனக் கூறி வெளுத்து வாங்கியிருக்கிறார்.
த்ருப்தியின் பிடியில் இருந்து தப்பித்து பிரக்ருதி ஓடியபோதும், அவரை பின் தொடர்ந்து சென்று பாபுஷானின் மனைவி அடித்து துவம்சம் செய்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிரக்ருதி மிஷ்ராவின் தாயார் த்ருப்தி மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
View this publish on Instagram
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பிரக்ருதி மிஷ்ரா “பெண்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இவையெல்லாம் அவர்களுக்கு தெரியுமா தெரியாதா? இதுப்போன்ற வன்முறைக்கு எதிரான பெரிய இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றுவோம் இன்னும் அதிவேகமாக இயங்க வேண்டும் என நினைக்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Supply : WWW.TAMILFUNZONE.COM