ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!

பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதன் அவசியம் குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி வேறு ஒரு வழக்கை விசாரிக்கும்போது அறிவுறுத்தி உள்ளது.

<robust>அண்ணனால் கர்ப்பம்</robust>

கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இதனை அறியாமல் அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் அந்த சிறுமி 30 வார காலமாக கர்ப்பமாக இருக்கிறார் என்பதே அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

<robust>உயர்நீதிமன்றத்தில் வழக்கு</robust>

சிறுமியின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்காக, கேரளா உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. சிறுமியின் தயார் இதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் சிறு வயதில் கர்ப்பத்தை சுமப்பதால், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல்கள், உளவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படும் என்பதால், கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்: விருது வாங்குவார்னு ஜோசியர் சொன்னபோது சிரிச்சேன்’ – சிவக்குமார் பகிரும் சம்பவம்!

<robust>கரு கலைப்பிற்கு அனுமதி </robust>

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அரசு தரப்பில் வாதிடப்பட்டபோது, 1971ம் ஆண்டின் மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கர்ப்ப காலம் 24 வாரங்கள் என்று கூறப்பட்டது. பின்னர் நீதிபதி வி.ஜி. அருண் இதுகுறித்த உத்தரவில், "சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு, கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதி அளிக்கப்படுகிறது", என்று கூறி அனுமதி அளித்திருந்தார்.

<robust>சம்பவம் கவலையளிக்கிறது</robust>

நீதிபதி இந்த வழக்கின் பின்னணி மற்றும் சமூக தாக்கங்கள் பெரிதும் கவலையளிக்கிறது எனப் பேசிய அவர், "இப்போது எல்லாம் பல குற்றங்களுக்கு, நெருங்கிய உறவினர்களும், குடும்பத்தினரும், தெரிந்தவர்களுமே காரணங்களாக இருக்கிறார்கள். அதனாலேயே குழந்தைகள் கர்ப்பமாவது குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இதைதவிர, இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன. இதெல்லாம் சிறுவர் சிறுமியரிடையே மனக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, குழந்தைகள் இணையத்தில் ஆபாச படங்களை பார்க்காமல் இருப்பதை, பெற்றோர் எப்போதும் உறுதி செய்ய வேண்டும்." என்று வலியுறுத்தினார்.

<robust>பாலியல் கல்வி அவசியம்</robust>

மேலும் பேசிய அவர், "இணையதளம், சோஷியல் மீடியாக்களை சரியாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது குறித்து குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பது அவசியம். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாலியல் தொடர்பான விஷயங்களில், குழந்தைகளுக்கு அதிக விழிப்புணர்வுவேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், அவர்களை முறையாக கையாளுவதிலும் மருத்துவமனைகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்", என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,871FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles