ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஸ்கை (Skye in Scotland) என்ற தீவு சமீபத்தில் நெகிழ்ச்சியான திருமணம் ஒன்றை சந்தித்திருக்கிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மகிழ்வான இன்னிங்க்ஸ்.. வாழ்விணையோடு புதிய வாழ்வின் தொடக்கத்தை கொண்டாடுவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் திட்டமிட்டுள்ளனர். திருமணம் என்றாலே அனைவருக்கும் பல திட்டங்கள் இருக்குமில்லையா? அப்படிதான் Amanda மற்றும் Paul Riesel இருவருக்கும். அமெரிக்காவில் வசிப்பவர்கள் தங்கள் திருமணத்தைக் கொண்டாட, திருமண நிகழ்விற்காக ஸ்காட்லாந்துக்குப் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பியாச்சு. மகிழ்வான நாளின் கொண்டாட்டத்தை எதிர்ப்பார்ப்பில் இருவரும் ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்கை தீவுக்குச் சென்றனர். இவர்களுடன் புகைப்பட கலைஞரும் உடன் சென்றிருந்தார்.
Amanda (அமெண்டா) மற்றும் பால் ரைசல் ( Paul Riesel) இருவரும் ஃப்ளோரிடா ( Florida) மாகாணத்தின் Orlando-விலிருந்து நாலாயிரம் மைல்கள் பயணித்து ஸ்கை வந்தடைந்தனர். இரண்டாண்டுகளாக திட்டமிட்டிருந்த திருமணம் நடக்கப்போகும் குஷி. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர்கள் பயணித்த விமானம் வெவ்வேறு திசைகளில் மாற்றிவிடப்பட்டு ஒருவழியாக ஸ்கை தீவுக்கு சென்றது. திருமண நடக்கும் முந்தைய நாள் இரவில்தான் தாங்கள் கொண்டுவந்த உடமைகள், (லக்கேஜ்), அதாவது திருமணத்திற்காக எடுத்து வந்த மோதிரம், திருமண உடை ஆகிவற்றை எங்கோ தொலைந்துவிட்டிருந்தது தெரிந்தது. என்ன செய்வதேன்றே தெரியாமல் தவித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
என்ன செய்ய போகிறோம் என்றிருந்த இருவருக்கும், புகைப்பட கலைஞர் ரோசி வுட்அவுஸ் (Rosie Woodhouse) தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாகவும், அதன்படி செய்யலாம் என்றும் தெவித்துள்ளார். ஏனெனில்,ஸ்கை போன்ற ஒரு இடம் திருமணத்திற்கு கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.
Islanders on Skye rallied to save lots of an American couple’s wedding ceremony after their baggage was misplaced on their trouble-hit 4,000 mile journey to Scotland.
Amanda & Paul Riesel discuss to @adilray & @susannareid100 about how wedding ceremony photographer Rosie Woodhouse and the Islanders saved the day. pic.twitter.com/p9jIXQ5Ote
— Good Morning Britain (@GMB) June 28, 2022
ரோசி தனது சமூக வலைதள பக்கத்தில், Amanda, Paul Riesel இருவரின் நிலைமை குறித்து பகிந்து உதவிக் கேட்டுள்ளார். ஸ்கை தீவு மக்கள் இருவரின் திருமணத்தை ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது. அப்பகுதியில் வசித்த மக்கள் செய்தியை அறிந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர்.
அமெரிக்க பள்ளியில் உணவு மேலாளாராக பணிபுரியும் அமெண்டாவிற்கு அங்கிருந்த ஒரு பார்லரில் மேக்கப் செய்யப்பட்டது. அமெண்டாவிற்கு 8 திருமண உடைகள் கிடைத்தன. ஒவ்வொருவரும், தன் மகன்/ மகள், தோழமையின் திருமணம்போல, ”இந்த இது உன் திருமணத்திற்காக” என்று பலவற்றை வழங்கியுள்ளனர்.
இன்னிசை, உணவு என மொத்த கல்யாணமும் தீவு மக்களின் ஆதரவினால் நடைபெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
யூட்யூபில் வீடியோக்களை காண