கமல் மகள் ஸ்ருதிக்கு கருப்பை வீக்க பாதிப்பு

கமல் மகள் ஸ்ருதிக்கு கருப்பை வீக்க பாதிப்பு

01 ஜூலை, 2022 – 11:04 IST

எழுத்தின் அளவு:


மும்பை: கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன்(36), ‘ஹார்மோன்’ கோளாறுகளால் கருப்பை வீக்கம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப்படங்களில் நடித்து வருகிறார். பத்திரிகைகளிடம் வெளிப்படையாக பேசும் பழக்கம் உடைய இவர், ஒரு காலத்தில் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி அதில் இருந்து படிப்படியாக மீண்டதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் உடற்பயிற்சி செய்யும், ‘வீடியோ’வை தன் சமூக வலைதள பக்கத்தில், வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படும், கருப்பை வீக்கம் மற்றும் கருப்பையை சுற்றி நீர்க்கட்டிகள் வருதல், ‘எண்டோமெட்ரியோசிஸ்’ எனப்படும், ‘ஹார்மோன்’ கோளாறுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.

இது எவ்வளவு கடுமையான போராட்டம் என்பதை பெண்கள் நன்றாகவே அறிவர். இந்த பாதிப்புகளை எதிர்த்து போராட துவங்கி உள்ளேன். நம் உடல் சந்திக்கும் இயற்கையான பிரச்னைகள் என இவற்றை எதிர்கொள்ள துவங்கி உள்ளேன். சரியான உணவு பழக்கங்கள், நல்ல ஓய்வு மற்றும் உடற்பயிற்சிகள் வாயிலாக இந்த ஹார்மோன் குறைபாடுகளை சிறப்பாக கையாளுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,430FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles