முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு- Tamilfunzone

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் திறப்பு விழா, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மார்கமாக வாலாஜாபேட்டை சுங்கச் சாவடிக்கு இன்று(செவ்வாய்கிழமை) இரவு 7.30 மணியளவில் வருகை தந்தார்.

அவருக்கு தமிழக நீர்ப்பானத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் திமுக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர  பாண்டியன்,  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள்  உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,504FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles