Actor Rakshit Shetty Receives Name From Famous person Rajinikanth After The Success Of 777 Charlie

சமீபத்தில் வெளியான தன்னுடைய `777 சார்லி’ திரைப்படத்தின் வெற்றியை வெகுவாகக் கொண்டாடி வருகிறார் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. தற்போது தென்னிந்திய திரையரங்கங்களில் வெவ்வேறு மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `777 சார்லி’ என்ற அட்வெஞ்சர் காமெடி திரைப்படத்தை இயக்கியிருப்பவர் கே.கிரண்ராஜ். `777 சார்லி’ படம் பார்த்தவர்கள் அனைவரும் அதனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டி சர்ப்ரைஸ் அளித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, `இந்த நாளின் தொடக்கமே மிக அற்புதமாக இருக்கிறது.. ரஜினிகாந்த் சாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று இரவு அவர் `777 சார்லி’ படம் பார்த்து, அதுகுறித்து பாராட்டியுள்ளார். படம் உருவாக்கப்பட்ட விதம், அதன் வடிவமைப்புகள் முதலானவற்றைப் பாராட்டிய அவர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து மிகவும் வியந்து பாராட்டினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து மற்றொரு பதிவில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, `சூப்பர்ஸ்டாரிடம் இருந்தே நேரடியாக இத்தகைய வார்த்தைகளைக் கேட்பது மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்!’ என நடிகர் ரஜினியையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,790FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles