1 லட்சத்துக்கு 30,000 வட்டி! வட மாவட்டங்கள்தான் டார்கெட்! பேராசை வலைவீசும் நிதி நிறுவனம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள சேவூர் கிராம பகுதியில் தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று, கடந்த 6ம் தேதி எந்தவித விளம்பரம் இன்றி தொடங்கப்பட்டது. பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்களகை் கூறி டெபாசிட் தொகை வசூலிக்க கூடாது என்றும், எந்த ஒரு நிறுவனமும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கிளைகள் தொடங்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது. ஆனால் சேவூர் கிராமத்தில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம், ஒரு கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது.அதன்படி 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 36 ஆயிம் ரூபாய் வட்டி வழங்குவதாகவும், தொடர்ந்து 12 மாதம் வழங்கப்படும் என்றும், மேலும் 2 தங்க காசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் டெபாசிட் செய்த பணத்திற்கான ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

மேலும், அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் கிளைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்த திட்டத்தால், அலுவலகம் திறந்த ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 125-க்கும் மேற்பட்டோர் தங்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக தெரிகிறது. ‛சதுரங்க வேட்டை படம் பாணியில் பணம் பறிக்க வேண்டுமென்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில், இந்த நிறுவனம் திறக்கபட்டுள்ளதாக,’ சமூக வளைதலங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து, ஆரணி வருவாய் துறை தாசில்தார் பெருமாள், ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அரசிடம் அனுமதி பெறப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளனர்.

விசாரணைக்குப் பின், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கூறி, ஒரு நாள் அவகாசம் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறிய கோட்டச்சியர் கோல்டு கம்பெனியில் இருந்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம், இதனை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளேன். மேலும் இந்த தனியார் கோல்டு கம்பெனியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறி சென்றனர்.

இந்நிலையில் தான் இன்று தனியார் கோல்டு கம்பெனி தற்போது சென்னை அமைந்தகரை தலையிடமாக கொண்டு விளங்கும் கோல்டு கம்பெனி வில்லிவாக்கம் , அண்ணாநகர், ஆவடி, ராணிப்பேட்டை ,வேலூர், செய்யார், பெருங்களத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ஓசூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளதாக தெரிகின்றது. அனைத்து இடங்களிலும்  பொருளாதார குற்றவியல் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேவூர் கிராமத்தில் உள்ள ஆரூத்ரா கோல்டு கம்பெனியில் ராணிப்பேட்டை மாவட்டம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 4 -மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்கள் ஏதேனும் நிறுவனத்தில் பணம் கட்டி பாதிக்கப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,375FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles