பாஜகவில் இணைந்த மறைந்த ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்தின் சகோதரர்

பாஜகவில் இணைந்த மறைந்த ராணுவ தளபதி விபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத்

மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத்தின், சகோதரர் விஜய் ராவத் பாஜகவில் புதன்கிழமை இணைந்தார்.

முப்படைகளின் தலைமை தளபதியான விபின் ராவத் கடந்த ஆண்டு குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இந்நிலையில் அவரது சகோதரரான விஜய் ராவத் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவில் இணைந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய தந்தை பணி ஓய்வு பெற்றதும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்கள் தொலைநோக்கு பார்வை வாய்ந்தது” எனத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,330FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles