Tamilnadu Authorities Introduced To Farmers Cost For Affected Of Heavyrain | பயிர் நிவாரண நிதி கிடைக்காத விவசாயிகளுக்கு ஓரிரு தினங்களில் நிவாரணம்

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ வடகிழக்கு பருவமழை 2021ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 44 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூபாய் 50.24 கோடி வரவு வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பெரு கனமழை பெய்தது. கனமழையினை தொடர்ந்து கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கிராம அளவில் அமைக்கப்பட்ட குழுவானது சேத மதிப்பீட்டினை ஆய்வு செய்தது.

பயிர்பாதிப்பு கணக்கெடுப்பு அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 905 ஏக்கர் நிலங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 132 கோடியே 11 லட்சம் நிதியானது 2 லட்சத்து 50 ஆயிரத்து 331 சிறு, குறு விவசாயிகளுக்கும், 15,241 பெரு விவசாயிகளுக்கும் மொத்தமாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 572 விவசாயிகளுக்கு முதல்வரால் நிவாரண நிதி விடுவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 444 விவசாயிகளுக்கு ரூபாய் 50.24 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விவசாயிகளுக்கு ஓரிரு தினங்களில் பயிர் நிவாரண நிதி முழுவதுமாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,124FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles