தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்களை ஜன.17இல் சந்திக்கும் அமித்ஷா

அமித் ஷா (கோப்புப் படம்)

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை ஜனவரி 17ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 7 பேர் கொண்டு தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு முயற்சி மேற்கொண்டது. எனினும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் வழங்காதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதையும் படிக்க | இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.60.71 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜனவரி 71ஆம் தேதி தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ஆந்திரத்தில் ஜன.31 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

இந்த சந்திப்பில் நீட் விலக்கு தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்த உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,124FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles