தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். அவர் நடித்த முந்தானை முடிச்சி, ராசு குட்டி, இது நம்மாளு, தாவணி கனவுகள், டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சரண்யா. அதன் பின்னர் படங்களில் அவர் நடிக்கவில்லை. பாக்யராஜ் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் குடும்பத்துடன் கேக் வெட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. குறித்த புகைப்படத்தினை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரசிகர்கள் அவரின் மகளை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதேவேளை, இவரது மகன் சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அண்மையில் அவர் நடித்த தங்கம் வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. இந்நிலையில் மகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.

The post நடிகர் பாக்யராஜின் மகளா இது..? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? வெளியான குடும்ப புகைப்படம்.. appeared first on Tamilanmedia.in.