சிபிராஜ் நடித்த ’சத்யா’, விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படமே கபடதாரி.

2019 இல் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த Kavaludaari படம் தான் தமிழில் ரெடியாகி உள்ளது. தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இப்படம்.

சைமன் கிங் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். தனஞ்செயன் தயாரித்துள்ளார். எடிட்டிங் பிரவீன். சண்டைக்காட்சிகளை ஸ்டாண்ட் சில்வா கவனித்துள்ளார்.

இப்படம் தைப்பூசம் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரைலர் நேற்று வெளியானது.