தென்னிந்திய நடிகரான நடிகர் சித்தார்த் தனது திறமையினால் தற்போது பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவரை பிரபல பாலிவுட் நடிகையுடன் சேர்த்து வைத்து அவ்வபோது கிசுகிசுக்கள் வரத்தொடங்கியது.

ஏனெனில் சித்தார்த் ‘ரங் தே பசாந்தி’ என்ற ஹிந்தி படத்தில் தன்னுடன் நடித்த நடிகை சோஹா அலிகானுடன் மும்பையில் டேட்டிங் அவுட்டிங் என்று இருவரும் ஊர் சுற்றித் திரிந்தனர். இதற்கெல்லாம் வசதியா மும்பையிலேயே சித்தார்த் செட்டில் ஆகிவிட்டார்.

இதன் காரணமாக பாலிவுட் ரசிகர்கள் சித்தார்த்-சோஹா அலிகான் நட்சத்திர தம்பதிகளாக உருவாகப்போகும் செய்தியை விரைவில் அறிவிப்பார்கள் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் எதிர்மாறாக தற்போது சோஹா, “நான் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. வேறு மாநிலத்திலிருந்து மும்பை வந்திருந்ததால் அவரிடம் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணினேன் அவ்வளவுதான். எங்களுக்குள்ள டேட்டிங் எல்லாம் நடக்கல, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ” என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

இதனால் ரசிகர்களும், ‘சோஹா சித்தார்த்துடன் டேட்டிங் செய்வதை இப்படி மறுத்துள்ளாரே?’ என்று வாயடைத்துப் போனார்கள்.

மேலும் தற்போது சோஹாவை பற்றி பத்திரிகையில் வெளியான செய்தியின் படி, “சித்தார்தின் வாழ்க்கையில் நான் முன்னுரிமை பெறுவதாக உணர்ந்தாள், அது இன்னும் புளிப்பாக இருந்தது” என்று சோஹா கூறியதாக வெளியாகி உள்ளது.

இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு சித்தார்த் சமந்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அதன் பின் இருவரும் பிரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது சமந்தா நாகஅர்ஜுன் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

siddarth

siddarthLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here