தமிழ் சின்னத்திரையில் டிரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கும்  நிகழ்ச்சிதான் விஜய் டிவியின் பிக் பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சி தினசரி ஒரு புது திருப்பத்தை கொண்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

அந்த வகையில் நேற்று VJ அர்ச்சனாவை 17வது போட்டியாளராக வீட்டுக்குள்ளே அனுப்பி வைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர்.

இது ஒருபுறமிருக்க நடிகை சிவானி நாராயணன் தனது நடனத்தால் விஜய் டிவியின் டிஆர்பியை ஏகபோகமாக எகிறவிட்டுள்ளார்.

அதாவது நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் உள்ள கன்டஸ்டன்ட்களுக்கு நடன போட்டியை டாஸ்க்காக கொடுத்திருந்தனர். நேற்று முன்தினம் நான்கு ஜோடிகள் ஆடி முடித்த நிலையில் இன்று மற்ற நான்கு ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இதில் கடைசியாக நடனமாடிய ஷிவானி- பாலாஜி முருகதாஸ் ஜோடி நடனத்தால் அனைவரது மனதையும் கவர்ந்தனர்.

அதாவது ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் ‘செல்லம்மா’ பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடி ஸ்டேஜயே ரணகளபடுத்தினர்.

இதை அடுத்து கலக்கலான நடனத்தை வெளிப்படுத்திய சிவானி கேமரா முன்சென்று ‘இந்தப் பாடலை எனக்காக தந்ததற்கு மிகவும் நன்றி பிக்பாஸ்’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ஷிவானியின் நடன தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கிய அவரது நாலு மணி போஸ்ட் பேன்கள், பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ஷிவானியின் டான்ஸ் வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.

The post ஒரே நடனத்தால் விஜய் டிவியின் டிஆர்பியை எகிற விட்ட சிவானி வீடியோ! குஷியான நாலுமணி போஸ்ட் ஃபேன்ஸ்! appeared first on Cinemapettai.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here