நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் கைது

The latest news, movie reviews and previews, music, trailers and photos, event videos and pictures, exclusive interviews with stars from South Indian movies. Galatta.com is the one stop shop for all your movie masala.

நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கும் முன் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளானார். இதனை தொடர்ந்து கார் ஓட்டுநர் மார்ட்டின், வடிவால் சலீம், பிரதீப் மேலும் இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சுனில்குமார் மற்றும் அவரது கூட்டளிகளான மணிகண்டன், விஜீஸ் ஆகியோரை கேரள காவல் துறை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் போதே மலையாள முண்ணனி நடிகரான திலீப்பின் பெயர் அடிபட்டது. நடிகர் திலீப், அண்மையில் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் குறித்து, இத்திருமணத்துக்கு முன்னதாகவே, திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியரிடம், பாவனா எச்சரித்ததாகவும், அதனால், திலீப் பாவனா இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தனது பட வாய்ப்புகளைத் திலீப் தடுத்து நிறுத்துவதாக, பாவனாவே ஒரு பேட்டியில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால் இவ்விவகாரத்தில் அவர் பெயர் அடிபட்ட நிலையில், பாவனாவுக்காக மலையாள திரையுலகினர் நடத்திய ஆதரவு கூட்டத்தில் பேசிய திலீப் 'பாவனாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இப்பிரச்சினையில் மலையாள திரையுலகினர் எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்பேன்' என்றார்.

ஆனால், நடிகை பாவனாவைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் பிடிபட்டதன் தொடர்ச்சியாகவழக்கு விசாரணையில் தனிப்படை ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையிலான காவல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் திலீப் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. மேலும் இயக்குநர் நாதிர்ஷா, நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன், அவரது தாய் ஷியாமளா ஆகியோர் மீதும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று திலீப்பிடம் கேரள காவல் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

bhavana dhilip arrest bavana case actress bhava case